நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை – ரணில் விக்ரமசிங்க

0
83
Article Top Ad

பாராளுமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரித்தது நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு, இவ்விடயத்தைக் கூறியுள்ளார். அத்தோடு, நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புத்தர் பிறந்த நேபாளம், இலங்கைக்கு ஒரு தனித்துவமான நாடு என்றும், இதுபோன்ற மிலேச்சத்தனமான செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள ரணில், நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும் அரசியலமைப்புத் தேர்தலை நடத்துவதும், தற்போது நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ள இராணுவத்தின் பொறுப்பாகும்  என தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.