நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்கு தடை விதிப்பு

0
63
Article Top Ad

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா பல்வேறு விண்வெளியை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

விண்வெளித் துறையில் அமெரிக்கா – சீனா இடையே போட்டி அதிகரித்து வருகிறது. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றன. சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா மற்றும் சீனா தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

இந்நிலையில், சந்திரன் மற்றும் சீனாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த விபரங்கள் சீனாவுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக நாசாவில் வேலை செய்ய சீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாசா மையத்திற்கு சீனர்கள் வரவும், விண்வெளித் திட்டங்கள் தொடர்பான தரவுகளை அணுகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.