19 கோடிக்கும் மேற்பட்டோர் உலகளவில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்!

0
300
Article Top Ad

 

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 19கோடிக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 19கோடியே இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 21கோடியே 25இலட்சத்து 94ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால் 44இலட்சத்து 44ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

இதற்கு அடுத்தப்படியாக வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக, இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.