தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. காலமானார்

0
65
Article Top Ad

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தம்மன்பிள்ளை கனகசபை, தனது 86ஆவது வயதில் நேற்று (19) காலமானார்.

மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார். கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று இவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.