தமிழ் மக்களின் கோரிக்கை கடிதமும் கையெழுத்துக்களும் ஐ.நா. பிரதிநிதியிடம் கையளிப்பு

0
62
Article Top Ad

தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து நடத்திய கையெழுத்துப் போராட்டத்தில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்களும், அவற்றுடன் கூடிய ஒருங்கிணைந்த கோரிக்கை கடிதமும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் வைத்து, நேற்று (23) அதிகாரப்பூர்வமாக இவை கையளிக்கப்பட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்காக இந்தக் கடிதம் எழுதப்பட்டதுடன், அதன் பிரதிகள் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்பு சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ  நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

தமிழ் மக்களுக்கு எதிராக நீண்டகாலமாக நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதை உறுதிப்படுத்தவும், குறிப்பாக வடக்கு–கிழக்கில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளை சர்வதேச மேற்பார்வையுடன் முன்னெடுத்து, அதனுடன் தொடர்பான ஆதாரங்களை பாதுகாக்கவும் ஆலோசனையும் தொழில்நுட்ப, நிதி மற்றும் பாதுகாப்பு வசதிகளையும் வழங்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரகுமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.