பராலிம்பிக்கில் தங்கம் வென்ற இலங்கையருக்கு என்ன குறைபாடு?

0
311
Article Top Ad


ஒலிம்பிக்குடன் தொடர்புடைய போட்டி நிகழ்ச்சியொன்றில் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் இலங்கையர்கள் திளைத்துக்கொண்டிருக்கின்றனர்.

வெளியே தெரியக்கூடிய அவயவக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதாக பலரும் எண்ணிக்கொண்டிருக்கும் பராலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சியில் ஈட்டியெறிதல் போட்டியில் பங்கேற்ற தினேஷ் பிரியந்த ஹேரத் என்ற வீரரே உலக சாதனையையும் நிலைநாட்டி இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்தச்சாதனை வீரரின் புகழை சமூக வலைத்தளத்தில் பலரும் தற்போது பெருமையுடன் பகிர்ந்துவருகின்றனர்.

மன்செஸ்டர் யுனைடற் கழகத்தில் ரொனால்டோவின் சம்பளம் ஒருவாரத்திற்கு 15 கோடியை விட அதிகம்!

 

 

தங்கப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத்தின் வெளித்தோற்றத்தைப் பார்க்கின்றவர்களுக்கு ஒருவேளை இவருக்கு ஒருகுறைபாடும் இல்லையே பின்னர் எதற்காக பராலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்றார் என்ற கேள்வி எழக்கூடும்.

இலங்கை இராணுவத்தில் அங்கத்தவராக இருக்கும் தினேஷ் பிரியந்த விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது 2008ம் ஆண்டில் இடது கையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார். ” துண்டாகிப்போன கையை ஒன்று சேர்க்க நான்கு வருடங்கள் எடுத்தன. அது எனது வாழ்வில் சோதனைக் காலம் ஈட்டியெறிதல் விளையாட்டே எனக்கு அனைத்தையும் தந்தது. அது எனது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப துணைபுரிந்தது.”  எனக்கூறும் பிரியந்தவின் இடதுகையில் துளைத்த மூன்று துப்பாக்கிச் சன்னங்களால் ஆழப்பதிந்த காயங்களை தற்போதும் அருகில் நின்று பார்க்கும்போது காணமுடியும்.

பிரியந்த ஈட்டி எறிதலில் F46 என்ற பிரிவிலேயே பங்கேற்றார். F 46 வகைப்பாடு என்பது கை குறைபாடு,தசை பலவீனம் அல்லது செயலிழந்த கைகளின் இயக்கம், விளையாட்டு வீரர்கள் நிற்கும் நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கானது.

பராலிம்பிக்கில் பங்கேற்பவர்கள் என பத்துபிரிவுகளில் ஏதாவதொன்றில் தகுதிபெற்றிருக்க வேண்டும். அவை பின்வருமாறு  Impaired muscle power , Impaired passive range of movement, Limb deficiency, Leg length difference, Short stature, Muscle tension, Uncoordinated movement, Involuntary movements, Vision impairment, Intellectual Impairment.

35 வயதுடைய தினேஷ் பிரியந்த தனது இளமைக்காலத்தில் 12 வயதிலேயே தந்தையை இழந்த நிலையில் சொல்லோணாத துன்பங்களைச் சந்தித்த போதும் அவற்றைத்தாண்டி தற்போது சாதனை படைத்துள்ளார்.

2016ம் ஆண்டு ரியோ டி ஜெனைரோ ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிய தினேஷ் 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் இன்றையதினம் டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் பிரிவில் 67.79 மீற்றர்கள் தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனையுடன் கூடிய தங்கப்பதக்கத்தை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது.