ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகாய்ச்சி தேர்வு

0
65
Article Top Ad

ஜப்பான் வரலாற்றில் முதற்தடவையாக, பெண் பிரதமர் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி (LDP) பெரும்பான்மை இழந்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் நடைபெற்ற கட்சித் தலைமைத் தேர்தலில், 64 வயதான சனே தகாய்ச்சி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தகாய்ச்சியின் வெற்றியை அடுத்து, அவர் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, அவர் ஜப்பானின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதன்படி, ஜப்பான் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கீழவையில் உள்ள 465 வாக்குகளில் 237 வாக்குகளைப் பெற்று, தகாய்ச்சி வெற்றி பெற்றார். மேலவையிலும் அவர் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், விரைவில் அவர் ஜப்பானின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கவுள்ளார்.

இதனுடன், ஜப்பான் அரசியல் வரலாற்றில் முதல் பெண் பிரதமராக பதவியேற்கும் பெருமையை சனே தகாய்ச்சி பெறுகிறார்.