வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் முக்கிய சந்தேகநபர் இன்று (27) கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், நேற்று மாலை நாவின்ன பகுதியில் கைது செய்யப்பட்டார். குறித்த கொலை தொடர்பாக ஏற்கனவே 3 சந்தேநபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், முக்கிய சந்தேகநபர் தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் விசேட விசாரணைக் குழுவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், அரச புலனாய்வு சேவை அதிகாரிகள் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரிகள் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு அவரை மஹரகம நாவின்ன பகுதியில் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் பல்வேறு பொலிஸ் குழுக்களினால், பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது.

