பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு

0
88
Article Top Ad

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, 21 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரில் உள்ள நீதிமன்றக் கட்டிடம் ஒன்றுக்கு முன்பாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில், பாதுகாப்புத் தடைக்குப் பின்னால் அமைந்துள்ள எரிந்த வாகனத்தின் இடிபாடுகளில் இருந்து கடுமையான தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகை வெளிவருவதை அவதானிக்கக்கூடியவாறு உள்ளது.

தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை.