தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71 ஆவது பிறந்ததினம் இன்று

0
68
Article Top Ad

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று கொண்டாடப்பட்டது.

யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்திலும் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது கேக் வெட்டி இனிப்பு வழங்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்க வழங்கியும் பொது மக்களுக்கு மர கன்றுகள் வழங்கியும் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

மேலும், இந்த கொண்டாட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.