பல வாரங்களாக தொடர்ந்த கடுமையான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (27) கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் தாய்லாந்து சார்பில் பாதுகாப்பு அமைச்சர் நதாபோன் நார்க்பானிட் (Nathaphon Narkphanit) மற்றும் கம்போடியா சார்பில் பாதுகாப்பு அமைச்சர் டீ செய்ஹா (Tea Seiha) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதையடுத்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இன்று நண்பகல் முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் அறிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட தீவிர மோதல்களால் சுமார் 101 பேர் உயிரிழந்ததுடன், இரு நாடுகளிலும் சேர்த்து ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

