ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 04 ஆவது போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 14 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிய நிலையில், மெல்போர்னில் 4 ஆவது போட்டி நடைபெற்றது.

கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாளான “பாக்ஸிங் டே” என்று சிறப்புடன் 4 ஆவது போட்டி தொடங்கியதால், அதில் வெற்றி பெற இரண்டு அணிகளும் முயற்சித்தன.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 152 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

தமது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 110 ஓட்டங்களுக்குள் தோல்வியுற்றது.
02 ஆவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா அணி 132 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் , 176 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, 2 ஆவது நாளில் வெற்றி பெற்றது.

