முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

0
132
Article Top Ad

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று (9) அனுமதி வழங்கியுள்ளது.

கம்பஹா நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதற்கமைய, தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் அடிப்படையில், கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.