சீனா ஜனாதிபதி ஸி ஜின் பிங் ஐ பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவுக்கு அதிகாரப்பூர்வம் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீன பயணம் இருநாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியுள்ளதுடன், வர்த்தக உறவுகளுக்கான புதிய கதவுகளையும் திறந்துள்ளது.
எட்டு ஆண்டுகளின் பின்னர் இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் என்பதால் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் இந்தப் பயணம் சர்வதேச ரீதியில் மிகவும் உண்ணிப்பாக அவதானிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள பிரித்தானியாவுக்கு சீனாவுடனான உறவு வலுபெறுவது வர்த்தக ரீதியாக பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருவருக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு வருகைதர விதிக்கப்பட்டிருந்த தடைகள் சீனா அகற்றியுள்ளதுடன், பிரித்தானிய பிரஜைகள் சீனாவில் 30 நாட்கள் விசா இன்றி தங்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பை சீன ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவர் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாகவுன் சீன ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

