மன்னர் சார்லஸின் சகோதர் ஆண்ட்ரூ எப்படி கைதுசெய்யப்பட்டார்? தேம்ஸ் வேலி காவல்துறை தீட்டிய திட்டம் என்ன?

0
28
Article Top Ad

மன்னர் சார்லஸின் சகோதரரும் முன்னாள் இளவரசரருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை கைதுசெய்ய நீண்டநாள் கண்காணிப்பையும் திட்டமிடலையும் தேம்ஸ் வேலி காவல்துறை  மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் பெயரும் அடிபட்டது.

எப்ஸ்டீன் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டதும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டனை அரச குடும்பத்தின் பதவிகளில் இருந்து நீக்கம் செய்து இங்கிலாந்து அரசர் சார்லஸ் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் விண்ட்சர் அரண்மனையை விட்டு ஆண்ட்ரூ வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.

இந்த சூழலில், பதவியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டதுடன் நேற்று பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது இங்கிலாந்து வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில், ஆண்ட்ரூவின் கைது தற்செயலாக இடம்பெற்றது அல்ல என்றும் இந்த கைதுதொடர்பில் தேம்ஸ் வேலி காவல்துறை  நீண்ட திட்டமிடலையும், கண்காணிப்பையும் மேற்கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேம்ஸ் வேலி காவல்  நிலையத்தின் மூத்த அதிகாரிகள் பல நாட்களாக இந்த நடவடிக்கையை முறையாகத் திட்டமிட்மிட்டுள்ளதுடன், இதற்காக விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளனர்.

விண்ட்சரில் உள்ள ஆண்ட்ரூவின் முன்னாள் வீட்டையும், சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் உள்ள அவரது தற்போதைய வீட்டையும் காவல்துறை பல நாட்களாக கண்காணித்துள்ளனர்.

சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் வீட்டை சோதனை செய்த விசேட பொலிஸ் குழுவொன்றும் நிறுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டவுடன், அவர்களே சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளையும் திட்டமிட்டுள்ளனர்.

பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் மன்னர் சார்லஸுக்கு இந்த கைது இடம்பெற உள்ளமை குறித்து எவ்வித தகவல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

தேம்ஸ் வேலி காவல் நிலையத்தை சேர்ந்த சுமார் 20 அதிகாரிகளின் ரகசிய திட்டங்களின் பிரகாரம் இந்த கைது இடம் பெற்றுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.