எல் மெஞ்சோ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த பாரிய வன்முறைகளில் மெக்சிகோவில் இதுவரை 70 பேர் பலி

0
27
Article Top Ad

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் குழுவின் பிரிதான தலைவர் எல் மெஞ்சோ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் வெடித்த பாரிய வன்முறைகளில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 25 பேர், மெக்சிகோ பொலிஸ் அதிகாரிகள் என்றும், 30 பேர் வன்முறை குழுக்களின் உறுப்பினர்கள் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி சிறப்பு இராணுவப் பிரிவினரால் எல் மெஞ்சோ சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அவரது தலைமையிலிருந்த ஜாலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல் (Jalisco New Generation Cartel) குழுவைச் சேர்ந்தவர்கள் பழிவாங்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக, மெக்சிகோவில் உள்ள 20 மாநிலங்களில் வன்முறைகள் பரவியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பாதாள கும்பல் உறுப்பினர்கள் பல இடங்களில் பாதைகளை மறித்து போக்குவரத்தை முடக்கியதுடன், கடைகள், வாகனங்கள் ஆகியவற்றை தீவைத்துச் சேதப்படுத்தினர்.

அத்துடன், பாதுகாப்புப் படையினருடன் நேரடி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல வங்கிகள் சேதமடைந்துள்ளதுடன், உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

காடுகள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதால், பல நகரங்கள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன.

வன்முறைகள் குறைவாக இருந்த சில சுற்றுலா நகரங்களும் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த 10,000 படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் மெக்சிகோ அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை, மெக்சிகோவில் வன்முறை கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக, ஆண்டுதோறும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவது தொடரும் பெரும் சமூக சவாலாக இருந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.