இங்கிலாந்தில் ‘தமிழ் நாடக விழா 2026’ நாளை

0
32
Article Top Ad

இங்கிலாந்தில் இயங்கி வரும் மெய்வெளி தமிழ் அரங்க இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ‘தமிழ் நாடக விழா 2026’ நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு வாட்டர்ஸ்மீட் தியேட்டர், ரிக்மன்ஸ்வொர்த் (Watersmeet Theatre, Rickmansworth) அரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த சிறப்பான நாடக விழாவில் நான்கு நாடகங்கள் அரங்கேற்றப்பட உள்ளன. இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனதாக மெய்வெளி தமிழ் அரங்க இயக்கம் தெரிவித்துள்ளது.

சமூக விழிப்புணர்வு, மனித உறவுகள், சமகால சிந்தனைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த கதைக்களங்களுடன் இந்த நாடகங்கள் மேடையேறவுள்ளன.

இந்த விழாவின் முக்கிய நாடகமாக “சுயம் திறக்கும் பெருவெளி – மெளனச் சத்தம்” அரங்கேற்றப்பட உள்ளது.

சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குரல்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த நாடகம் இருக்கும் என்றும் மெய்வெளி தமிழ் அரங்க இயக்கம் கூறியுள்ளது.

இங்கிலாந்தில் வாழும் தமிழ் மக்களின் கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த நாடக விழா இருக்கும் என்றும், குடும்பத்துடன் வந்து இரசிக்கக்கூடிய வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் மெய்வெளி தமிழ் அரங்க இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் நாடகக் கலையை நேசிக்கும் அனைவரும் தவறாமல் பங்கேற்று, இந்த மாபெரும் கலைவிழாவை வெற்றியடையச் செய்யுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.