ஈரானுடனான பேச்சுவார்த்தை எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அதற்கான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இவ்விவகாரத்தில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில்தான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இன்னும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் ஈரானுடனான பேச்சுவார்த்தை தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தவிர்க்க ஈரான் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக நேரம் கொடுக்கிறேன். ஈரானை தாக்க அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை. சில நேரங்களில் அதை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

