மத்திய கிழக்கு போர் – பொருளாதார மந்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக IMF கணிப்பு

0
8
Article Top Ad

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால்,
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை இல்லாதளவிலான இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 14ஆம் திகதி வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (World Economic Outlook) ஊடாக, சர்வதேச நாணய நிதியம் பல்வேறு பொருளாதார நிலைமைகள் குறித்த கணிப்புகளை முன்வைக்கவுள்ளது.

போரினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் கடுமையான நிதி நிபந்தனைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையக்கூடும் என்று நிபுணர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர்.

போர் ஏற்படாதிருந்தால், பெருந்தொற்றுக்குப் பின்னர் பொருளாதாரம் மீட்சியடைந்து வந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் 3.3% மற்றும் 2027 ஆம் ஆண்டில் 3.2% உலகப் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்ததாக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here