இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு

0
2
Article Top Ad

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியொன்றை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் அந்த வாழ்த்துச் செய்திக்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய்,

“இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்”
எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு முதலமைச்சர் விஜய் அளித்துள்ள பதிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here