தனது தோல்வியை ஒப்புக்கொண்டாரா ஜனாதிபதி? இல்லை என்கிறார் ஊடகத்துறை அமைச்சர்

0
228
Article Top Ad

தற்போதுள்ள அரசாங்கம் தோல்வியடைந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த 6 இலட்சம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதையே ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் முற்றிலுமாக அழிக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்தை இந்த அரசாங்கமே மீட்டெடுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் அடைந்த அனைத்து சாதனைகளும் 2015 க்குப் பின்னர் தலைகீழாக மாறியது என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்