நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இலங்கையை இனவாதத்திற்குள் மூழ்கடித்துக்கொண்டுபோகலாம் என எண்ணிவிடாதீர்- சுரேஷ் பிரேமச்சந்திரன் அபாயச் சங்கு

0
230
Article Top Ad

இலங்கையில் ஜனநாயகம் வேண்டும் என்றோ நாட்டில் மாற்றம் வேண்டுமென்றோ எதிர்த்தரப்பினர் யோசித்தால் சனத்தொகையில் ஏறத்தாழ 30 சதவீதமாக உள்ள தமிழ் பேசும் மக்களைக் கையாள்வது தொடர்பாக எதிர்த்தரப்பினர் எத்தகைய தெளிவான பார்வையைக் கொண்டிருக்கவேண்டும் என யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலப் பிரச்சனைகளைப் பற்றி பேசுவதுடன் மாத்திரம் நின்றுவிடாது அந்தப்பிரச்சனைகளுக்கு ஆக்கபூர்வமான முடிவுகளை எட்டவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நாட்டை நூற்றுக்கணக்கான வருடங்கள் இனவாதத்திற்குள் மூழ்கடித்துக்கொண்டுபோகலாம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருப்பீர்களேயானால் விரும்பிய அனைத்தும் நிறைவேறமாட்டாது எனவும் எதிர்க்கட்சிக்கு அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு தாம் பதவிக்கு வருவது தான் பிரச்சனை என எதிர்த்தரப்பு எண்ணுமாக இருப்பினால் யாரும் பேசமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.