சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள் 85 நிமிடங்களுக்கு கமலா ஹரிஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது ஏன்?

0
243
Article Top Ad

அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக இருப்பர் கமலா ஹரீஸ் . நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க வரலாற்றில் முக்கியமான பெருமை மிகு தருணத்திற்கு சொந்தக்காரராகி இருக்கின்றார்.

உலகின் மிகவும் சக்திமிக்கவராக கருதப்படும் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குரிய அதிகாரங்களை கொண்டிருந்த பெண் என்ற பெருமையை கமலா ஹரீஸ் பெற்றிருக்கின்றார்.

அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடன் வழமையான தனது மருத்துவ பரிசோதனைக்குள்ளான காலப்பகுதியில் தனது பதவிக்குரிய அதிகாரங்களை தற்காலிகமாக கமலா ஹரீஸிடம் ஒப்படைத்திருந்தார்.

79வது பிறந்த தினத்தை விரைவில் கொண்டாடவுள்ள ஜோ பைடன் ஜனாதிபதியான பின்னர் முதற்தடவையாக மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டிருந்தார்.

மருத்துவ பரிசோதனைக்கு உட்படும் போது ஜோ பைடனுக்கு மயக்க மருந்துசெலுத்தப்பட்டு மயக்க நிலைக்கு உட்பட நேரிட்டது

இதன்காரணமாக அமெரிக்க ஜனாதிபதிக்குரிய இராணுவ மற்று அணுவாயுத அதிகாரங்களை 85 நிமிடங்களுக்கு உப ஜனாதிபதி கமலா ஹரீஸிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தாய்க்கு பிறந்த கமலாதேவி ஹரீஸ் உலகில் மிக வல்லமை பொருந்திய பதவியான அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களை ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கொண்டிருந்தமை தமிழ் பேசும் மக்களுக்கு பெருமை தரும் தருணமென்றால் மிகையல்ல.