அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் டிம் பெய்ன்!

0
208
Article Top Ad

அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக டிம் பெய்ன் அறிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கிரிக்கெட் டாஸ்மேனியாவில் பணிபுரியும் பெண் சக ஊழியருக்கு அவர் வெளிப்படையான குறுஞ் செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) ஹோபார்ட்டில் நடந்த ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அவுஸ்ரேலிய ஆடவர் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான எனது முடிவை இன்று அறிவிக்கிறேன். இது நம்பமுடியாத கடினமான முடிவு, ஆனால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், கிரிக்கெட்டிற்கும் சரியான முடிவு’ என கூறினார்.

இதேவேளை அவுஸ்ரேலியக் கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் ஃப்ரூடென்ஸ்டைன் கூறுகையில், ‘தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கான இந்த முடிவை எடுத்தது அவரது குடும்பம் மற்றும் அவுஸ்ரேலிய கிரிக்கெட்டின் நலன்களுக்கு நல்லது என்று டிம் கருதினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விவகாரம் தொடர்பாக டிம்மின் நடத்தை விதிகளை மீறியதாக விசாரணை நடத்தப்பட்டதை சபை ஒப்புக்கொண்டாலும், அவரது முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவுஸ்ரேலிய கிரிக்கெட் இந்த வகையான மொழி அல்லது நடத்தையை மன்னிக்கவில்லை.

அவர் செய்த தவறு இருந்தபோதிலும், டிம் நியமிக்கப்பட்டதில் இருந்து ஒரு விதிவிலக்கான தலைவராக இருந்து வருகிறார். மேலும் அவரது சிறப்பான சேவைக்கு சபை, அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. டிம் ஆஷஸ் கோடையில் டெஸ்ட் அணியில் தொடர்ந்து தேர்வு செய்யப்படுவார்’ என கூறினார்.