‘ஆப்கானில் பட்டினி நெருக்கடி’ ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

0
327
Article Top Ad

ஆப்கானிஸ்தான் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பகுதியினர் தற்போது முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் பட்டினி நெருக்கடிக்கு முகம் கொடுக்கலாம் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

அத்தியாயசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் நிலைமை மோசமடைந்து வருவதாக மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ ஆப்கானிஸ்தானில் 95 வீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உண்பதற்கு போதுமான உணவு இல்லாதிருப்பதாக அந்த அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், 50 ஆயிரம் தொன்கள் கோதுமையை தரைவழியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்க இந்தியா உத்தேசித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவும் வகையிலான இந்தியாவின் இம்மனிதாபிமான உதவிகளை தன் தரைவழிப்பாதை ஊடாக அனுப்பி வைக்க பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ‘அல் அரபியா போஸ்ட்’ தலிபான்களுக்கு அதன் தொடக்கம் முதல் ஆதரவு நல்கிவரும் பாகிஸ்தானுக்குஇ ஆப்கான் மக்கள் மீது பாரிய பொறுப்பு உள்ளது’ என்றுள்ளது.