சஜித் அணி கடும் கண்டனம்! – இது காட்டாட்சிக்கு எடுத்துக்காட்டு எனவும் தெரிவிப்பு
“முள்ளிவாய்க்காலில் மாவீரர் நாளன்று செய்தியாளர் ஒருவர் இராணுவத்தினர் சிலரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மனித உரிமைகளை குறிப்பாக ஊடகவியலாளர்களின் உரிமைகளை மதிக்கும் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீடு அற்றவர்கள் சிலருக்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகளை வட பிராந்திய கட்டளைத் தளபதி கையளித்த அதே சந்தர்ப்பத்தில் இந்தத் தாக்குதல் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வட பிராந்திய இராணுவத் தளபதியின் கவனத்தை நாம் கோருகின்றோம்.
மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை வட பிராந்திய கட்டளைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் உறுதிப்படுத்த முன்வர வேண்டும் என்று நாம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்” – என்றார்.
“முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்தத் தாக்குதலானது தனிநபர் மீதான தாக்குதலாக நாம் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம்.
எனவே, குறித்த ஊடகவியலாளர் மீது தாக்குதலை மேற்கொண்ட இராணுவத்தினர் மீது சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வதுடன் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்” – என்றார்.