2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம்!

0
206
Article Top Ad

 

2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இதுகுறித்து கூறுகையில், “இந்த புறக்கணிப்புக்கு சீனா உறுதியான எதிர் நடவடிக்கைகளை எடுக்கும். விளையாட்டில் அரசியல் நடுநிலைமையை அமெரிக்கா மீறுகின்றது.

முன்மொழியப்பட்ட புறக்கணிப்பு பொய்கள் மற்றும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டது’ என கூறினார்.

வர்த்தக போர், கொரோனா தோற்றம் என பல்வேறு விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகின்ற நிலையில், ஸின்ஜியாங்கின் மேற்குப் பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் உய்குர் சிறுபான்மையினரை ஒடுக்கியதில் சீனா இனப்படுகொலை செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சீனா கடுமையாக மறுத்துள்ளது.

திங்களன்று, சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் குறித்து பெய்ஜிங்கிற்கு தூதரக அதிகாரிகளை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்கா கூறியது.

அமெரிக்க விளையாட்டு வீரர்கள் செல்லலாம் மற்றும் முழு அரசாங்க ஆதரவைப் பெறுவார்கள் என்றும் அது கூறியது.