3 Trillion அமெரிக்க டொலர்கள் பெறுமதியை பெற்ற முதல் நிறுவனமாகஅப்பிள் நிறுவனம் புதிய சாதனை

0
180
Article Top Ad

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் நிறுவனம் 3 டிரில்லியன் டொலர் பங்குச் சந்தை பெறுமதியை தொட்ட முதல் நிறுவனமாக பதிவாகியுள்ளது.

அதன் பங்கு விலை 182.88 டொலரை எட்டியபோது அதன் மதிப்பு 3 டிரில்லியன் டொலரானது. அதன் பின்னர், அதன் பங்கு விலை சற்றுக் குறைந்தது. 2018ஆம் ஆண்டு, 1 டிரில்லியன் டொலர் மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனமாகவும் அது உள்ளது.

ஐபோன் விற்பனையே அதன் வருவாயில் முக்கிய பங்களிப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்பிலான மற்றொரு நிறுவனம் மைக்ரோசொப்ட் ஆகும்.