இலங்கையை நன்கறிந்தவர் இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக நியமனம்

0
754
Article Top Ad

இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக அரிந்தம் பக்சி நியமிக்கப்பட்டுள்ளார். அனுராக் ஸ்ரீவாட்சவா வகித்த பதவிக்கே அவர் தற்போது தெரிவாகியுள்ளார். அனுராக்கிற்கு இந்தியாவின் வடமாநிலங்களுக்கான இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அனுராக் ஸ்ரீவாட்சவாவும் அரிந்தம் பக்சியும் முன்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றியிருந்தனர். அரிந்தம் பக்சி இலங்ககைக்கான உதவி இந்தியத்தூதுவராகவும் முன்னர் கொரோசியாவிற்கான இந்தியத்தூதுவராகவும் அரிந்தம் பக்சி பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவு சேவையின் 1985ம் ஆண்டு அணியைச் சேர்ந்த அங்கத்தவரான அரிந்தம் பக்சி பல மொழிகளைப் பேசும் ஆற்றல் மிக்கவர் என்பதுடன் வங்காள மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட முதலாவது பேச்சாளராவார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஷிற்கு விஜயம் செய்வதற்கு முன்பாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான உறவு அண்மைக்காலமாக சவால்களைச் சந்தித்துவரும் நிலையில் பக்சியின் நியமனம் கவனத்திற்கொள்ளப்படவேண்டியதாகும்.