பொது இடங்களுக்குச் செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும்! – அரசு அறிவிப்பு

0
203
Article Top Ad

பொது இடங்களுக்குச் செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

க்யூ.ஆர் (QR Code) கோட் உள்ளடங்கிய புதிய தடுப்பூசி அட்டையும் தடுப்பூசி செயலியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் தடுப்பூசி ஏற்றுகையை துரிதப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரையில் நாட்டில் 28 வீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்