குட்டித் தேர்தல் ஒத்திவைப்பு: ஜே.வி.பியும் கடும் எதிர்ப்பு!

0
147
Article Top Ad

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய காலப்பகுதிக்குள் நடத்துமாறு ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இந்த வலியுறுத்தை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உள்ளாட்சிசபைகளின் செயற்பாட்டுக்கு மக்கள் நான்காண்டுகளே ஆணை வழங்கினர். தற்போது மக்கள் ஆணையை மீறும் வகையில் பதவிக் காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயலாகும்.

இந்த நடவடிக்கையை அரசு மீளப்பெறவேண்டும். உரிய காலப்பகுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும்” – என்றார்.