கோட்டா அரசால் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் இளைஞர்கள் – சபையில் சஜித் சாடல்

0
362
Article Top Ad

இலங்கையிலுள்ள இளைஞர்களை கோட்டாபய அரசு வெளிநாட்டுக்குத் துரத்தியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிககையில்,

நாட்டிலுள்ள பிரச்சனைகள் இப்போது தீரவில்லை. ஆனால் பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பு என்று கூறி இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.

இஸ்லாமிய சமூகத்தை இவர்கள் இப்போது துன்புறுத்துகின்றனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு இன்னமும் பதில் கிடைவில்லை.

நாட்டில் வாழ முடியாது என்று இங்குள்ள இளைஞர்கள் வெளிநாட்டுக்குச் தப்பிச் செல்கின்றனர். இளைஞர்கள் இங்கு இல்லை என்றால் எதிர்காலத்தில் இந்த நாட்டைப் பாதுகாப்பது யார்?

வாழும் மக்களிடம் பணம் இல்லை, நாட்டில் டொலர் இல்லை. கொரோனாவைக் காரணம் காட்ட வேண்டாம். உலக நாடுகளும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியுள்ளன. ஆனால் அங்குள்ள மக்கள் வரிசையில் நிற்கவில்லை என்றார்.