யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி பரிதாப மரணம்!

0
282
Article Top Ad

மூன்று தினங்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட  பல்கலைக்கழக மாணவி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது 23) எனும் சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் கல்வி  பயிலும் மாணவியே உயிரிழந்தார்.

மாணவியின் குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் இன்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு ஒப்படைக்கப்பட்டது.