இலங்கை இணைய நாள் 2021: டிஜிட்டல் காலம்

இலங்கையில் உள்ள தகவல் தொழில்நுட்ப தொழில்துறை அமைப்பின் (FITIS) டிஜிட்டல் சேவைகள் பிரிவு அதன் 'இணைய நாள் 2021' இனை நாளை ஏப்ரல் 6 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கின்றது.

0
520
Article Top Ad
 
இலங்கை சனத்தொகை 21.4 மில்லியனாகும். அதில் 80% (17 மில்லியன்) மக்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துகின்றனர். எவ்வாறிருப்பினும் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் சனத்தொகையில் 145% (31 மில்லியன்). 10.9 மில்லியன் மொத்த இணையப் பாவனையாளருடன் 70% இனால் இணையப் பாவனை அதிகரித்திருப்பதோடு 3.8 மில்லியன் மக்கள் தங்களது கையடக்கத் தொலைபேசி மூலமாக இணையத்தை பயன்படுத்துகின்றனர். நாட்டில் 7.9 மில்லியன் சமூக ஊடகப் பாவனையாளர்கள் இருக்கின்றனர். 92% மான சனத்தொகையினரிற்கு இணையத்தை பயன்படுத்தக் கூடிய வசதி கிடைத்துள்ளது. பிராந்தியத்தில் பெரும்பாலானர்களை விட நாங்கள் முன்னிலையில் இருக்கின்றோம். இருப்பினும் முழுமையான இணையத்தை பயன்படுத்தும் வசதியினை பெறுவது முக்கியமாகும். 
இலங்கையில் உள்ள தகவல் தொழில்நுட்ப தொழில்துறை அமைப்பின் (FITIS) டிஜிட்டல் சேவைகள் பிரிவு அதன் ‘இணைய நாள் 2021’ இனை நாளை ஏப்ரல் 6 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கின்றது.
 தொழில்நுட்ப அமைச்சு மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் அமைச்சு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூர கற்றல் மேம்படுத்தல் ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு நாள் இணைய வழி நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வின் இவ்வாண்டிற்கான கருப்பொருள் ‘டிஜிட்டல் ஒருங்கிணைவு’ எனபதாகும். இது எதிர்கால பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னுரிமைப்படுத்துதல் தொடர்பில் நாட்டின் ஒப்புதலை வெளிப்படுத்துதலாகும். இது தவிர ‘டிஜிட்டல் ஒருங்கிணைவு’ டிஜி;ட்டல் சமுதாயத்தில் பிரஜைகளின் ஈடுபாட்டையும் அணுகல், இலகுவில் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் டிஜிட்டல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் நேர்மறையான தாக்கங்களையும் வெளிப்படுத்த விரும்புகின்றது.
சமத்துவம் மற்றும் ஓருங்கிணைப்பதற்கான தளத்தை சமம் செய்வதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்று குஐவுஐளு இன் டிஜிட்டல் சேவை பிரிவின் ஜிப்ரி ஜுல்பர் தெரிவிக்கின்றார். நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் என்று வரும் போது, நமது அடிப்படைகள் மற்றும் உட்கட்டமைப்பு விடயங்களில் நாம் முன்னிற்கின்றோம் என்பதாகும். அனைத்தும் தற்போது ஒரு இடத்தில் உள்ளது. அதற்கு தேவையானது நமது சிந்தனையில்; மாற்றம் மட்டுமே. அதற்காக எங்களுக்கு கொள்கை மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றம் தேவை, இது நிறுவனத்தையும் முதலீட்டையும் ஊக்குவிக்கும், பின்னர் அது பிரமிட்டின் அடிப்பகுதிக்குச் செல்லும் வழியைக் குறைத்து, நம் அனைவருக்கும் செழிப்பைக் கொடுக்கும்.
இலங்கை சனத்தொகை 21.4 மில்லியனாகும். அதில் 80ம% (17 மில்லியன்) மக்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துகின்றனர். எவ்வாறிருப்பினும் கையடக்கத் தொலைபேசி இணைப்புக்கள் சனத்தொகையில்; 145% (31 மில்லியன்). 10.9 மில்லியன் மொத்த இணையப் பாவனையாளருடன் 70% இனால் இணையப் பாவனை அதிகரித்திருப்பதோடு 3.8 மில்லியன் மக்கள் தங்களது கையடக்கத் தொலைபேசி மூலமாக இணையத்தை பயன்படுத்துகின்றனர். நாட்டில் 7.9 மில்லியன் சமூக ஊடகப் பாவனையாளர்கள் இருக்கின்றனர். 92% மான சனத்தொகையினரிற்கு இணையத்தை பயன்படுத்தக் கூடிய வசதி கிடைத்துள்ளது. பிராந்தியத்தில் பெரும்பாலானர்களை விட நாங்கள் முன்னிலையில் இருக்கின்றோம். இருப்பினும் முழுமையான இணையத்தை பயன்படுத்தும் வசதியினை பெறுவது முக்கியமாகும். முக்கியமான விடயம் என்னவென்றால், இணையத்தின் மதிப்பு மற்றும் அதனை சரியாக பயன்படுத்துவது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும். அடுத்தது இணையத்தினூடாக அரச சேவைகளை செயல்படுத்துவது.
‘எமது உள்ளுர் வியாபாரங்களும் சந்தை நிலவரங்களை புரிந்துகொண்டு அதை தங்கள் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும். இது தளத்தை சமம் செய்யும். தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த இலங்கை என்பதனை தனது நோக்காகக் கொண்ட அதி மேன்மைதகு, ஜனாதிபதி அவர்களின் மேன்மையான ஆதரவின் கீழ் நமது பொருளாதாரத்தின் டிஜிட்டல் துறை வந்துள்ளமையானது எங்களை பெரிதும் ஊக்குவிக்கின்றது. எங்கள் நாட்டினை ஒரு தொழில்நுட்ப திறன் மிக்கதாக உருவாக்க ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் நோக்கத்திலிருந்து நாம் இதனை குறிப்பிடுகின்றோம். இந் நிகழ்விற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கிய நாட்டின் முதன்மை டிஜிட்டல் நிறுவனமாக ICTA உடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மைக்ரோசொப்ட் இந்தியாவின் வென்ச்சர் கேபிடல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி பார்ட்னர்ஷிப்ஸின் நாட்டிற்கான தலைவரும் நிகழ்வின் இணைத் தலைவருமான லத்திகா பை கருத்துத் தெரிவிக்கையில் ‘இலங்கை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதில் ஒரு முக்கியமான ஊடுருவல் கட்டத்தில் உள்ளது என குறிப்பிட்டார். இதை விரைவுபடுத்துவதற்கு பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைவது முக்கியம், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
இந்த இரண்டு நாள் நிகழ்வில் 40 இணையவழி அமர்வுகள் இடம்பெறுவதோடு பொது மற்றும் தனியார்துறையை சேர்ந்த தலைவர்களாலும் நிபுணத்தவம் வாய்ந்தவர்களாலும் சில முக்கிய தலைப்புக்களில் உரையாடல்கள் இடம்பெறும். இந்த அமர்வுகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள், சமூக ஊடக தொடர்பு மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளை மையமாகக் கொண்ட பல்வேறு தலைப்புக்களை உள்ளடக்கும். டிஜிட்டல் நோக்கம், டிஜிட்டல் தந்திரோபாயங்கள், டிஜிட்டல் கொடுப்பனவுகள், டிஜிட்டல் அடையாளங்காணல், டிஜிட்டல் தொடக்கங்கள், டிஜிட்டல் வளர்ச்சி, முதலீட்டாளர்கள், டிஜிட்டல் SME கள், வெளிநாட்டு சந்தைகளுக்கான டிஜிட்டல் தயாரிப்புகள், டிஜிட்டல் வரி, டிஜிட்டல் தொடர்பாடல், Cloud , Data மற்றும் AIபோன்ற டிஜிட்டல் கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்ற எதிர்கால டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான தலைப்புகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும். இவற்றில் சில அமர்வுகள் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் நடாத்தப்படும்.
அனைத்து நிகழ்வுகளிலும் தொழில் வல்லுநர்கள், விடயத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள் ஆகியோரால் உரை நிகழ்த்தப்படும். அவர்கள் அந்தந்த குழுக்கள் இணையத்திலிருந்து எவ்வாறு பயனடையலாம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் முழு நாட்டிற்கும் என்ன செய்ய முடியும் என்பதற்கான பெறுமதியான அறிவுரைகளை வழங்குவர்.
இந்த இணைய நாளில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு முக்கிய உரையினை வழங்கவிருக்கின்றார். அவருடன் அமைச்சர்களான அஜித் நிவ்ராட் கப்ரால் மற்றும் சுசில் பிரேமஜந்த ஆகியோரும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர். பல தொழில்வல்லுனர்கள் மற்றும் முக்கிய பேச்சாளர்கள் ஆகியோரும் உரை நிகழ்த்தவுள்ளனர்.