“அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான லக்ஷ்மன் கிரியெல்ல இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை என ஐக்கிய மக்கள் கட்சி முடிவெடுத்திருந்த நிலையில், கட்சி முடிவை மீறி செயற்பட்டதாலேயே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார, . ஆகியோருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த காலத்தில் அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக கருத்துகளை வெளியிட்ட சுசில் பிரேமஜயந்த், விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கும் பலம்வாய்ந்த அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:
1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த் – கல்வி அமைச்சர்
3. கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்
4. விஜயதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
5. ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
6. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
7. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
8. நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
9. டிரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சர்