பொருளாதார நெருக்கடிக்கு ரணில் தீர்வை வழங்க மாட்டார்!

0
152
Article Top Ad

”நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு பிரதமர் ரணில் தீர்வை வழங்க போவதில்லை. நாட்டின் சொத்துகளை விற்பதற்கு கைதேர்ந்தவரே ரணில்” – ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இன்று (22) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரணிலும், கோட்டவும் ஒரே அணியாக இருப்பது வெளியில் நன்றாக தென்படுகின்றது. ஒருவரை ஒருவர் காப்பாற்றும் செயற்பாடு இதற்கு சான்றாகும். மஹிந்த ராஜபக்ஸ அன்று மக்களின் பணத்தை களவாடியதாலேயே தோற்கடித்து மைத்திரி – ரணில் அரசை மக்கள் உருவாக்கினர்.

இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை தீர்க்க வெளிநாடுகளில் கடன் பெறுகின்றனர். அடுத்த வருடம் அவற்றை மீள செலுத்த வேண்டும். இப்படி சென்றால் நெருக்கடியில் இருந்து மீள முடியமா? தற்போதைய நெருக்டிக்கு ரணில் தீர்வை வழங்க போவதில்லை. அவர் நாட்டின் சொத்துகளை விற்பதற்கே கைதேர்ந்தவர்.

எவருக்கும் அரசியலில் தெளிவில்லை. துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும் துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலையே நாட்டில் காணப்படுகிறது.

வழமைப்போன்று ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதே நடக்கும். கோட்டாவை வீட்டுக்கு செல்லுமாறு கூறிய ஹரீன், மனுச ஆகியோர் அமைச்சு பதவிகளைப் பெற்றுள்ளனர். இதிலிருந்து இவர்கள் யாரென எவருக்கும் விளங்கி கொள்வது கடினம் அல்ல. எமது நாட்டின் போக்கு இப்படிதான் உள்ளது.

உருவங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர கொள்கையளில் மாற்றம் ஏற்படவில்லை. பழக்கப்பட்ட அரசியல் இயந்திரம் ஒன்றே சுழல்கிறது. நாட்டின் அடிமட்டத்திலிருந்து மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.