இந்திய கடன் உதவியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல் இன்று வருகை!

0
198
Article Top Ad

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் எரிபொருளை ஏற்றிய இறுதி கப்பல் இன்று(16) கொழும்பை வந்தடையவுள்ளது.

அதன்மூலம் 40,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளது.

எவ்வாறாயினும், பெட்ரோல் கப்பல் வரும் திகதியை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை உறுதியாக கூறவில்லை.

இன்று(16) வந்தடையவுள்ள கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.