ருவாண்டாவில் ஜி.எல்.பீரிஸை சந்தித்த ஜெய்சங்கர் ; இலங்கையின் நெருக்கடி குறித்து கலந்துரையாடல்!

0
106
Article Top Ad

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று வியாழன் அன்று ருவாண்டாவில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்தித்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்குமென கூறியுள்ளார்.

ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் இருவரும் கலந்துகொள்ள சென்றுள்ள சந்தர்ப்பத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா தலைமையிலான நான்கு பேர் கொண்ட தூதுக்குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்டத் தலைமைகளை கொழும்பில் சந்தித்து.

முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக உறுதியளித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீரிஸுடனான ஜெய்சங்கரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் தற்போதைய ஆதரவு குறித்து இரு தரப்பினரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக கூறியுள்ளது,