எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த வாரம் அதிகாரப்பூர்வமற்ற முடக்கத்துக்கு நாடு உள்ளாகியுள்ளது.
மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கூட முழுமையாக முடங்கியள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பொது சேவைகளும் மட்டுப்படுத்தபப்ட்டுள்ளன.
இன்று காலை கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் வீதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
பெட்ரோல் நிலையங்கள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தாலும், எரிபொருள் கிடைப்பது குறைவாக உள்ளது. குறிப்பாக ஐஓசி நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது.
இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு போதுமான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு சில அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
என்றாலும் அரசாங்கத்தின் திட்டமிடலற்ற நடவடிக்கையால் நாடு ஸ்தம்பித்துள்ளமையையே அவதானிக்க முடிகிறது.