இலங்கையில் புதிய பிறழ்வுடன் மீண்டும் கொவிட் பரவும் அபாயம்!

0
145
Article Top Ad

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய பிறழ்வுடன் இந்தத் தொற்று பரவலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் இதிலிருந்து மீள்வதற்கு கொவிட் தடுப்பூசிகள் நான்கு டோஸ்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்று முழுவதுமாக கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. முதன்மை தடுப்பூசியை பெற்றவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியையும் பெறுமாறு முன்னர் நாம் கூறியிருந்தோம். இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்களைதான் நாம் நான்காவது தடுப்பூசியையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். தற்போது இலங்கையினுள் 20 வயதுக்கும் அதிகமானோருக்கு வெற்றிகரமாக முதன்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நூற்றுக்கு 97 சதவீதமானவர்களுக்கு. எனினும் பூஸ்டர் தடுப்பூசி நூற்றுக்கு 7.9 சதவீதமானவர்களுக்கு மாத்திரமே போடப்படடுள்ளது என்று கூறியுள்ளார்.