ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க இதொகா தீர்மானம்!

0
158
Article Top Ad

பாராளுமன்றத்தில் நாளை இடம்பெறும் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது.

இன்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க சிறந்த தீர்வாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் இருப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டது. நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் ஆதரவு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்தே ரணில் விக்ரமசிங்கவிற்கு இ.தொ.கா தனது முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.