மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

0
234
Article Top Ad

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் இருந்தும் இன்று (23) பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.