கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக ITJP சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு!

0
122
Article Top Ad

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யுமாறு கோரி சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றப் புகார் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறினார் என்றும், இவை சிங்கப்பூர் மற்றும் உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்ட உள்நாட்டு வழக்குகளுக்கு உட்பட்ட குற்றங்கள் என்றும் 63 பக்கம் கொண்ட முறைப்பாட்டு அறிக்கையை கையளித்துள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது ஜெனிவா உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டங்களை கோட்டாபய ராஜபக்ச கடுமையாக மீறியதாக சட்டப்பூர்வ முறைப்பாடுகள் உள்ளன. கொலை, மரணதண்டனை, சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கை, கற்பழிப்பு மற்றும் பிற பாலியல் வன்முறைகள், சுதந்திரத்தை பறித்தல், கடுமையான உடல் மற்றும் மனநல பாதிப்பு மற்றும் பட்டினி ஆகியவை இதில் அடங்கும் என்றும் ITJP சட்டத்தரணிகள் முறையிட்டுள்ளனர்.