Article Top Ad
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் சில அதிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அவர்கள் அரசுடன் இணைந்துகொள்வதற்கு அந்தக் கட்சிகளின் எம்.பிக்கள் சிலர் இரகசியமாகக் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சர்வகட்சி அரசை அமைப்பதற்கான பேச்சுக்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் அதேவேளை, இன்னுமொரு பக்கத்தில் கட்சித் தாவல்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் நடக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் சிலரும் அரசுடன் இணைந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.