பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி ரணிலை சந்தித்தார்!

0
163
Article Top Ad

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்பான செயல்முறை மற்றும் மனித உரிமைகளுக்கு இணங்குவது உட்பட பல விடயங்களில் கவனம் செலுத்தியதாகவும் இது தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான மற்றும் ஜனநாயக இடத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.