Article Top Ad
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஜூலை 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மென்மையான மதுபான விற்பனை உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு கடந்த மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளை அதிக நெகிழ்வுத்தன்மையுடன் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகள் மற்றும் தங்குமிடங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு வருடாந்தம் ரூபா 25,000 ரூபா கட்டணத்தில் மென் மதுபான உரிமங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.