இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா விடுதலை

0
349
Article Top Ad

ஜப்பானிய நிறுவனத்திடம் இலஞ்சம் கேட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அவர் குற்றமற்றவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான குழு அறிக்கை அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.