2022இல் பொருளாதார வளர்ச்சி எதிர்மறை -7 சதவீதமாக குறையும்!

0
161
Article Top Ad

ஏற்கனவே இந்த ஆண்டின் (2022) முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி எதிர்மறையான -1.6 சதவீதத்தை பதிவு செய்துள்ளது.

மின்சாரம் மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக விநியோக துறையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான தடங்கல்களினால் இவ்வருடத்தின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி, பாதகமான உள்நாட்டுப் போக்குகளுக்கு மத்தியில் உலகளாவிய சரக்கு சந்தை மற்றும் விநியோகச் சங்கிலிகளை பாதித்துள்ளது. இது உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்று மத்திய வங்கி கூறுகிறது.