இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்துக்கு செல்ல கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Tanee Sangrat, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை. கோட்டாபய ராஜபக்ஷவை 90 நாட்கள் தங்குவதற்கு தாயலாந்து அனுமதியளிக்கும். அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.
என்றாலும் கோட்டாபய ராஜபக்ச எப்போது வருவார் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கவில்லை.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி (இன்று) தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.