75 % மின் கட்டண உயர்வினால் தயிர், ஐஸ்கிரீம், இறைச்சி போன்ற குளிரூட்டப்பட்ட மற்றும் உறை நிலை பொருட்களின் விலைகள் அதிகரிக்குமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வினால் உணவக உரிமையாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவித்த சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்களின் விலையை குறைத்ததை அடுத்து மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களை மீண்டும் உணவகங்களுக்கு ஈர்க்கும் வகையில், தேநீர் ரூ.30 ஆகவும், மதிய உணவுப் பொதீயை 10 ரூபாவாலும் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குளிர்சாதனப் பொருட்களுக்கான விலைகள் மட்டுமின்றி கடைகளில் மின் கட்டணம் உள்ளிட்ட விலை உயர்வால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உற்பத்தி நிறுவனங்கள் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் விலையை நிர்ணயிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.